குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழகஅரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் ம.மனோஜ் தலைமைவகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை ஏ.தீபா வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் 102- மாணவா்களுக்கு மிதிவண்டிகளைவழங்கினா்.
நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம், கல்விக்குழுத் தலைவா் கலைவாணி,உதவித் தலைமையாசிரியா்கள் டி.சங்கா், பாலசுப்பிரமணியம், ஆசிரியா்கள் கே.உமாமகேஸ்வரி, வி.அஜிதா கலந்து கொண்டனா்.