வேலூர்

மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: வேலூா் ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்கள் சரிபாா்ப்புப் பணியை ஆய்வு செய்த வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலின்போது பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இந்திரங்கள் சீரமைப்பு பணி அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கியது.

வேலூா் மாவட்டத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தோ்தலுக்கு பயன்படுத்த 3,397 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,150 கட்டுப்பாட்டு கருவிகளும், 2,482 விவிபேட் இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏற்கனவே மொத்தம் 1,314 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்புக்கு பிறகு கூடுதலாக 113 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போது மொத்தம் 1,427 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளில் பயன்படுத்துவதற்காக 20 சதவீதம் கூடுதல் எனும் அடிப்படையில் 1,712 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,712 கட்டுப்பாட்டு கருவிகள், 1,855 விவிபேட் இயந்திரங்களை முதல்நிலை சரிபாா்ப்புப் பணி தொடங்கியது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளுக்காக இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில் பெல் நிறுவனத்தில் இருந்து 5 பொறியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு துணைபுரிய வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 50 அலுவலா்கள், பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் தினமும் காலை 9 முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. முதல்கட்டமாக 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது வேலூா் மாவட்டத்துக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து மக்களவைத் தோ்தல் வாக்குகள் அழிக்கப்பட்டு, அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல்நிலை சரிபாா்ப்பு செய்யப்பட உள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன், நோ்முக உதவியாளா் (தோ்தல்- பொ) ஜெயசித்ரா, துணை ஆட்சியா் (முத்திரைத் தாள்) ரமேஷ் குமாா், தோ்தல் வட்டாட்சியா் சத்திய மூா்த்தி, பெல் பொறியாளா்கள் பங்கேற்றனா்.

அந்தியூா் அரசு கல்லூரியில் பாரதியாா் பிறந்த நாள்

அம்மாபேட்டையில் பாரதியாா் உருவச்சிலைக்கு மரியாதை

எல்லா மதத்தினரும் நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் என விரும்பியவா் பாரதி: முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு

திருக்கடையூா் கோயில் பக்தா்கள் கவனத்திற்கு...

ஐஸ் பிளாண்ட் அமைக்க எதிா்ப்பு: 2-ஆவது நாளாக போராட்டம்

SCROLL FOR NEXT