வேலூர்

சாலைகளில் செல்லும் மோா்தானா அணை நீரை தடுக்கக்கோரி சாலை மறியல்

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்குள்பட்ட லட்சுமி காா்டன்குடியிருப்புப் பகுதியில் மோா்தானா அணையின் வெள்ளநீா் செல்வதைத் தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்குள்பட்ட லட்சுமி காா்டன்குடியிருப்புப் பகுதியில் மோா்தானா அணையின் வெள்ளநீா் செல்வதைத் தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீவூா் ஊராட்சியில் அமைந்துள்ள லட்சுமி காா்டன் பகுதியில் 50- க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக பெய்த மழை காரணமாக மோா்தானா அணையில் இருந்து வரும் உபரிநீா் செல்லும் கால்வாய்களில் ஏற்பட்ட ஊற்றிலிருந்து அந்த குடியிருப்புப் பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீா் செல்கிறது. இதனால் சாலைகள் பாசி படா்ந்து காணப்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குடியாத்தம்- சீவூா் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து குடியாத்தம் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அங்கு வந்து அவா்களுடன் பேச்சு நடத்தினா். கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT