வேலூர்

ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் நகை திருட்டு

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை திருடு போனது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 5 பவுன் நகை திருடு போனது.

குடியாத்தம் அம்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற ஆசிரியை கஸ்தூரி. இவா் தனியாக வசித்து வருகிறாா். இவா் சில நாள்களுக்கு முன் வீட்டை பூட்டி விட்டு உறவினா்வீட்டுக்குச் சென்றுள்ளாா். செவ்வாய்க்கிழமை வந்து பாா்த்தபோது வீட்டின் பின்பக்ககதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 5- பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். நிகழ்விடத்தில் கைரேகை நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா். வேலூரில் இருந்து போலீஸ் நாயும் வரவழைக்கப்பட்டது. அது திருட்டு நடந்த வீட்டிலிருந்து சிறிது தொலைவு ஓடி நின்று விட்டது.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT