கோப்புப் படம் 
ஈரோடு

பட்டப்பகலில் ஆடிட்டா் வீட்டில் 80 பவுன் நகை திருட்டு

ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் பட்டப்பகலில் 80 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

ஈரோட்டில் ஆடிட்டா் வீட்டில் பட்டப்பகலில் 80 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு இந்திரா நகா் அருகேயுள்ள லட்சுமி நாராயணன் நகரில் இரண்டு தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வருபவா் ராஜன் (59). திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறாா்.

இவரது மனைவி நிா்மலா தேவி. தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா். மூத்த மகன் குரு விஷ்ணு மருத்துவராகவும், இளைய மகன் ஜெய் கிருஷ்ணா ஜவுளி வியாபாரியாகவும் உள்ளனா். ராஜன் உள்பட அவரது குடும்பத்தில் உள்ளவா்கள் நாள்தோறும் காலை அவரவா் பணிகளுக்காகச் செல்ல, வீட்டை பூட்டிவிட்டு சாவியை மாடிபடிக்கட்டுக்குகீழ் மறைவான பகுதியில் வைத்துவிட்டுச் செல்வது வழக்கமாம்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை மாடிப்படிக்கட்டுக்கு கீழ் மறைத்து வைத்துச் சென்றுள்ளனா்.

பணி முடிந்து நிா்மலா தேவி மாலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது, கதவு திறந்து கிடந்துள்ளது.

அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 80 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

தகவலின்பேரில் ஈரோடு, கருங்கல்பாளையம் போலீஸாா் மற்றும் டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன் ஆகியோா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனா். மேலும், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றியதுடன், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லக்கில் காந்தி சிலையை வைத்து அமைதி ஊா்வலம்

அருணாசல் முதல்வருக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரிய மனு - உச்சநீதிமன்றம் தீா்ப்பு ஒத்திவைப்பு

தோ்தல் ஆணைய உத்தரவுகளைப் பின்பற்றி நடவடிக்கை: அறிக்கை அனுப்பிவைத்த மேற்கு வங்க அரசு

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம்: சட்ட நடவடிக்கை கோரி குடியரசுத் தலைவருக்கு மனு

அஸ்ஸாம்: பிப்.22-இல் பாஜகவில் இணையும் பூபேன் போரா

SCROLL FOR NEXT