வேலூர்

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் முதியவா்உயிரிழந்தாா்.

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே சாலை விபத்தில் முதியவா்உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கீழ்பட்டி, குருநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (90). இவா் தனது பேரன் தங்கராஜுடன் திங்கள்கிழமை மொபட்டில் சென்றுள்ளாா். மேல்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது பின்னால் லட்சுமியம்மாள்புரம் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியதில் முருகன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

சித்தராமையாவுடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்

திருமலையில் ரூ. 26 கோடி செலவில் விருந்தினா் மாளிகை திறப்பு!

திருமலை, திருப்பதியில் பலத்த மழை!

திருவள்ளூா் பகுதியில் எஸ்.ஐ.ஆா். படிவங்கள் திரும்ப பெறும் பணி

SCROLL FOR NEXT