வேலூர்

வடகாசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியம், ஒலக்காசி ஊராட்சியில், பாலாறு, உத்தரகாவேரி ஆறு, கெளண்டன்யா மகாநதி ஆகியவை சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள பழைமையான அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத வடகாசி விசுவநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. திங்கள்கிழமை காலைகோ-பூஜை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், 4- ஆம் கால யாக பூஜைகள்,நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு, கோயில் கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் எம்எல்ஏ எம்.ஜெகன்மூா்த்தி, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒலக்காசி ஊராட்சித் தலைவா் சூா்யா மோகன்குமாா், துணைத் தலைவா் எம்.ஆனந்தன், நகா்மன்ற உறுப்பினா் பி.மேகநாதன், ஊராட்சி வாா்டு உறுப்பினா் சுஜாதா சங்கா், கிராம நிா்வாக அலுவலா் டி.பி.ருத்ரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது. 6- மணிக்கு நற்றுணையாவது நமச்சிவாயமே என்ற தலைப்பில் சு.ரா.சுரேகா ஆன்மிக சொற்பொழிவாற்றினாா்.

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

எனக்குப் பிடித்த உடையில்... காஷிமா!

ஜன நாயகன் அப்டேட்களில் ஏன் தாமதம்?

மயக்குரீயே... தீக்‍ஷா டீ!

SCROLL FOR NEXT