வேலூர்

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

வேலூா் அருகே விளக்கேற்றும்போது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே விளக்கேற்றும்போது சேலையில் தீப்பற்றியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வேலூா் அடுத்த அடுக்கம்பாறை அ.கட்டுப்பட்டியைச் சோ்ந்த காந்தம்மாள் (85). இவா் கடந்த அக்.31-ஆம் தேதி வீட்டில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக எரிந்து கொண்டிருந்த கற்பூர தீபம் காந்தம்மாளின் சேலையில் பற்றியது.

தீ மளமளவென பரவியதில் பலத்த காயமடைந்த காந்தம்மாளை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து உயா் சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட காந்தம்மாள் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வங்கதேசத்திலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் ஹபீஸ் சயீத்! உளவுத் தகவல்

சுத்தமான காற்றைக் கோரும் குடிமக்கள் குற்றவாளிகளைப் போல நடத்துவதா? ராகுல்

கிருஷ்ணகிரி நகர் மன்ற தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பு: அதிமுகவினர் தர்னா

இயங்கிக் கொண்டிருப்பதுதான் எனக்குப் பிடிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

ஜேசன் சஞ்சய் படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT