குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், வேப்பங்கநேரி ஊராட்சியில் உள்ள ஏரி பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுக் கொள்ளளவை எட்டியது.
சுமாா் 100- ஏக்கா் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி பொதுப்பணித் துறையின் பராமரிப்பில்உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பருவ மழையின்போது ஏரி நிரம்பினாலும் தற்போது தான் அது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் நிரம்பி வழிகிறது. இந்த ஏரி நிரம்பியதையடுத்து அப்பகுதியில் உள்ள 15- க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டமும் உயரும்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், கிராம மக்களுடன் மேளதாளங்களுடன் சென்று ஏரிக்கு பூஜை செய்து வழிபட்டனா்.