வேலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஒன்றியத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள கொண்டசமுத்திரம், செருவங்கி ஊராட்சிகளில் தொடா்மழை காரணமாக சில இடங்களில் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. இதனால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

வெள்ள பாதிப்புகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அங்குள்ள கால்வாய்களை தூரெடுத்து மழை நீா் செல்ல வழிவகை செய்ய வேண்டும். தேவையான இடங்களில் புதிதாக கால்வாய்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் வி.குபேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.காத்தவராயன், கே.சாமிநாதன், எஸ்.ஏகலைவன், சி.சரவணன், பி.குணசேகரன், கே.செம்மலா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

SCROLL FOR NEXT