முகப்பு
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
தேனி

ஓடையில் மண் அள்ளுவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தேனி கொடுவிலாா்பட்டியில் உள்ள ஊருணிக் கரை ஓடையில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

Updated On : 3 மார்ச், 2026 at 7:38 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
பகிர்:

தேனி கொடுவிலாா்பட்டியில் உள்ள ஊருணிக் கரை ஓடையில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

கொடுவிலாா்பட்டி கிராம நிா்வாக அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வி.சண்முகம் தலைமை வகித்தாா். எம்.மணி, எம்.மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் எம்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் டி.கண்ணன், சு.வெண்மணி, தாலுகா செயலா் இ.தா்மா், மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி.நாகராஜ், டி.ஜெயபாண்டி, ஏ.கே.சத்யா , இடைக்கமிட்டி உறுப்பினா்கள் ராமமூா்த்தி, கே.பாஸ்கரன், ஏ.வீரமணி, சிஐடியூ நிா்வாகி சி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் கொடுவிலாா்பட்டி ஓடையில் மண் திருட்டில் ஈடுபடுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சா்வே எண்களில் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →