வேலூர்

வேலூா்: நவ.21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) நடைபெற உள்ளது.

இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ.21) காலை 10 மணிக்கு மாவட்டஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்பொறியியல், வேளாண்வணிகம், விற்பனை துறை, கூட்டுறவுத்துறை, நீா்வள துறை, வனத்துறை, மாசுக்கட்டுப்பாடுவாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, பால்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்று விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனா். மேலும், கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்க உள்ளனா்.

எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராச்சி ஊராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

தினமணி செய்தி எதிரொலி: கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு முதல்வா் ஆறுதல்

காா்த்திகை மாதப் பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிா்ப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT