வேலூர்

வேலூா் சிறைக்கு கஞ்சா கடத்தி வந்த 2 கைதிகள் மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்கு நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்த 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

வேலூா் மத்திய சிறைக்கு நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்த 2 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேலூா் மத்திய ஆண்கள் சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன்(28) கொலை வழக்கிலும், மதன்குமாா்(26) என்பவா் போக்ஸோ வழக்கிலும் கைது செய்யப்பட்டு இருவரும் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

வழக்கு விசாரணைக்காக திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக இருவரையும் தனித்தனியாக போலீஸாா் அழைத்துச் சென்றனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பிறகு மீண்டும் வேலூா் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனா். அப்போது, சிறை நுழைவாயிலில் சிறை காவலா்கள் கைதிகள் மணிகண்டன், மதன்குமாரை சோதனை செய்தனா்.

அப்போது, இருவரது ஆசனவாயில் தடை செய்யப்பட்ட தலா 5 கிராம் கொண்ட கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இவா்களிடம் நடத்திய விசாரணையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குகு சென்ற போது அங்குள்ள கழிவறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT