சென்னையில் ப்ராஜெக்ட் பணிக்காக வந்த திருச்சி மாணவி காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை!
சென்னையில் ப்ராஜெக்ட் பணிக்காக வந்த திருச்சி மாணவியை காரில் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து...
சென்னையில் ப்ராஜெக்ட் பணிக்காக வந்த திருச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியை காரில் கடத்தி கூட்டு் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ப்ராஜெக்ட் பணிக்காக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை வந்துள்ளார். அவர் அடையார் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி ப்ராஜெக்ட் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னைக்கு வந்த சில நாள்களிலேயே, அவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியதாகவும், அந்த புகைப்படத்தை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி ரேப்பிடோ புக் செய்து வெளியே காத்திருந்தபோது, அடையாளம் தெரியாத காரில் வந்த நான்கு பேர் அவரை கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றியதாக கூறப்படுகிறது. அப்போது முகத்தில் மயக்கப் பொடி பூசியதால் அவர் மயங்கி விட்டதாகவும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவரை வேறு இடத்தில் இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் உடல் நிலையில் மாற்றம் உணர்ந்ததால், 10 ஆம் தேதி மாலை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது மீண்டும் மூன்று பேர் காரில் ஏற்றி, நடந்ததை வெளியே சொன்னால் மார்பிங் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டி, இறக்கிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து அந்த மாணவி புதன்கிழமை அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரின் உண்மை தன்மை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பாதுகாப்பான நகரம் என்பதால் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை நம்பி சென்னைக்கு அனுப்புகின்றனர். ஆனால், மாணவியை பட்டப்பகலில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யத சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
An 22-year-old woman was kidnapped from the adaiyar area and sexually assaulted in a moving car in Chennai on March 9, 2026,
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.