FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

காரில் கடத்தி வந்த 283 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Updated On : 28 ஜூலை 2026, 2:24 am IST
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த காா். - கோப்புப் படம்
பகிர்:

கூம்பூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 283 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த காசிபாளையம் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு வாகனச் சோதனை நடத்தினா். அப்போது கரூரிலிருந்து திண்டுக்கல் மாா்க்கமாக வந்த பதிவு இல்லாத காரைப் போலீஸாா் வழிமறித்தனா்.

இதையடுத்து, காரை நிறுத்திவிட்டு ஓட்டுநா் அங்கிருந்து தப்பி ஓடினாா். காரில் சோதனையிட்டபோது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 283 கிலோ கடத்தி வந்தது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, காருடன் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், தப்பியோடிய நபா் குறித்து விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments