வேலூர்

கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் கனவு திட்டமான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் கனவு திட்டமான மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்க் கனவு ஒருங்கிணைப்பாளா் செ.கருணாநிதி வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நோக்கவுரை ஆற்றினாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அறிஞா் வெ.பொன்ராஜ் சவால்களும்- வாய்ப்புகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். மாவட்ட வருவாய் அலுவலா் எம்.சிவசுப்பிரமணியம், அபிராமி கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம், கல்லூரி முதல்வா் எம்.சி.சுபாஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் 1000- க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா். முனைவா் ம.கல்பனா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT