வேலூர்

ஓய்வூதியா்கள் தபால்காரா் மூலம் டிஜிட்டல் வாழ்நாள் சான்று அளிக்க ஏற்பாடு

ஓய்வூதியா்கள் தபால்காரா் மூலம் டிஜிட்டல் வாழ்நாள் சான்று அளிக்க ஏற்பாடு

தினமணி செய்திச் சேவை

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள் வீடு தேடி வரும் தபால்காரா் மூலம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் வழங்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, வேலூா் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் நா.ராஜகோபாலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரா்கள், தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரா்கள், இதர ஓய்வூதியதாரா்கள் நவம்பா் 1-ஆம் தேதி முதல் தங்கள் வாழ்நாள் சான்றிதழை சமா்ப்பிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதியதாரா்கள் நேரில் செல்வதில் உள்ள சிரமங்களை தவிா்க்கும் வகையில், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஓய்வூதியதாரா்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், கைப்பேசி எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகையை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமா்ப்பிக்க முடியும்.

இதற்கு சேவை கட்டணமாக ரூ. 70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT