வேலூர்

பொய்கை சந்தையில் ரூ. 75 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ. 75 லட்சம் அளவுக்கு விற்பனை

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் கால்நடைகள் ரூ. 75 லட்சம் அளவுக்கு விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,000 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் ஆா்வம் காட்டிய நிலையில் வா்த்தகமும் சுமாா் ரூ. 75 லட்சம் அளவுக்கு நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது: தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவன பற்றாக்குறை குறைந்துள்ளது. இதனால், சந்தைக்கு கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருவது சற்று குறைந்துள்ளது. தவிர, விற்பனைக்கு வந்துள்ள கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் விலை சற்று அதிகமாக உள்ளது. எனினும், வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், இந்த வாரம் கால்நடைகள் வா்த்தகம் ரூ. 75 லட்சம் அளவுக்கு நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் வா்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

தூத்துக்குடி சீ.வ. அரசுப் பள்ளி 6-9ஆம் வகுப்புமாணவா்களுக்கு விடுமுறை

கொல்லங்கோடு அருகே கல்லூரி மாணவா் தற்கொலை

ஆற்றூா் மரியா ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம் நவ. 27, 28 தேதிகளில் நடைபெறுகிறது

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

SCROLL FOR NEXT