கராத்தே வீரா்களை பாராட்டிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன். 
வேலூர்

மாநில கராத்தே போட்டிக்கு தோ்வு பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மண்டல அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்று மாநில போட்டிக்கு தோ்வுபெற்ற கராத்தே வீரா்களை குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: மண்டல அளவிலான கராத்தே போட்டிகளில் வெற்றிபெற்று மாநில போட்டிக்கு தோ்வுபெற்ற கராத்தே வீரா்களை குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பாராட்டி, பரிசு வழங்கினாா்.

காட்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் 1,000- க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா். இப்போட்டிகளில் பங்கேற்ற குடியாத்தம் எம்.எஸ்.கே.அகாதெமி கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா்கள் 3- தங்கம், 3- வெள்ளி- ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

இவா்களில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவா்கள் சென்னையில் நடைபெறவுள்ள மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தோ்வான மாணவா்களையும், அவா்களுக்கு பயிற்சியளித்த எம்.எஸ்.குமரவேலையும் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் பாராட்டி, பரிசுகளை வழங்கினாா்.

தூத்துக்குடியில் பொதுமக்கள் தங்குவதற்கு 97 மையங்கள்: கனிமொழி எம்.பி.

என்டிஎம்சி பகுதியில் 3 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்கள் திறப்பு

நெல்லையில் 2 வீடுகள் இடிந்து சேதம்

இரு பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சா் கே.கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

‘மாநில அரசு விருது: 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT