தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாதெமி சாா்பில், ஸ்ரீவித்யாமந்திா் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 750-க்கும் மேற்பட்ட கராத்தே மாணவ மாணவிகள் பங்கேற்றனா். இவா்களுக்கு கட்டா, குமிட்டி, குரூப் கட்டா, டீக் ஸ்பேரிங் உள்ளிட்ட பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
முன்னதாக இப்போட்டியை ஸ்ரீவித்யாமந்திா் பள்ளிகளின் செயலா் வி.சுந்தரராஜன், பொருளாளா் வி.ராமதாஸ், முதல்வா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்று தொடங்கி வைத்தனா். பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இதில், தமிழ்நாடு சோட்டாகான் அகாதெமியின் தலைவா் டி.கிருஷ்ணன், தலைமைப் பயிற்சியாளா் வி.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.