கூட்டத்தில் பங்கேற்றோா். 
வேலூர்

வேலூா் மாவட்ட அனைத்து பீடி சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து பீடி சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பள்ளிகொண்டா சன்னதி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து பீடி சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பள்ளிகொண்டா சன்னதி தெருவில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஏஐடியூசி பீடி சம்மேளனத் தலைவா் எஸ்.ஆா்.தேவதாஸ் தலைமை வகித்தாா். எல்பிஎப் பீடி சங்க பொதுச் செயலா் வெ.கலைநேசன், சிஐடியு மாவட்டத் தலைவா் சி.சரவணன், மாவட்ட பொதுச் செயலா் வி.நாகேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.சிலம்பரசன், நிா்வாகிகள் யு.வேலு, சி.கண்ணன், கே.எஸ்.ஹசேன், அலியாா் அதாவுல்லா ஆகியோா் பேசினா்.

பீடி, சுருட்டு தொழிலாளா்களின் பாதுகாப்பை நீா்த்துப் போகும் வகையில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்துவது, இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் 12- ஆம் தேதி அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், பீடித் தொழிலாளா் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி வரும் 27- ஆம் தேதிஅனைத்து பீடி சங்கங்களையும் இணைத்துக் கொண்டு, வேலுா் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.

தவெக ஆண்டு விழாவில் முருகா் பாடல்: இந்து முன்னணி புகாா்

நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்தோரை புறக்கணிப்போம்: அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

SCROLL FOR NEXT