குடியாத்தம் ஸ்ரீஅபிராமி மகளிா் கல்லூரியில் தனியாா்துறை நடத்தியவேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- மாணவிகளுக்கு பணி ஆணைகள்வழங்கப்பட்டன.
முகாமுக்கு கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம் தலைமை வகித்தாா். செயலா் டி.என். சிட்டிபாபு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் சுபாஷினி வரவேற்றாா்.
முகாமில் 26- முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 485- மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன.