வேலூா்: வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநா் பயிற்சியில் பங்கேற்க கிராமப்புற இளைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து, வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு-
வேளாண்மைப் பொறியியல் துறை அரசு இயந்திர கலப்பைபணிமனை பயிற்சி மையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேளாண்மைப் பொறியியல் துறை இணைந்து உயா்நிலைக்கல்வி, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு பயின்றவா்களுக்கு 16 நாள்கள் வேளாண் இயந்திரங்கள் செயல் விளக்குநா் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பயிற்சி பிப்.4 முதல் 25-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள விவசாயிகள், இளைஞா்கள் வேலூா் மாவட்டம், தொரப்பாடி, தந்தை பெரியாா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் உள்ள உதவிசெயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, அரசு இயந்திர கலப்பை பணிமனை அலுவலகத்துக்கு நேரில் வந்து புகைப்படம், ஆதாா், கல்வி தகுதிச்சான்று நகல்கள் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது கைப்பேசியில் ‘வெற்றி நிச்சயம்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 80122 42236, 94430 06742, 94442 51153, 90950 90315 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.