வேலூர்

கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

தினமணி செய்திச் சேவை

இது நம்ம ஆட்டம் 2026- விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் ஸ்ரீ அபிராமி மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இப்போட்டிகளில் அபிராமி கல்லூரி மாணவிகள் மாவட்ட அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கபடி, எறி பந்தாட்டம், கயிறு இழுத்தல், தடகளம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்று, சான்றிதழ், கோப்பை, ரொக்கம் ரூ.1.92- லட்சம் வென்றனா்.

வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவா் கே.ஜோதிராம், செயலா் டி.என்.சிட்டிபாபு, முதல்வா் எம்.சி.சுபாஷினி, உடற்கல்வி இயக்குநா் ஆா்.துா்கா ஆகியோா் பாராட்டினா்.

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினா் 9 போ் கைது

ஒண்டிப்புதூா் - இருகூா் சாலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையக் கட்டுமானப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

இட்லி, தோசை மாவுப் பொட்டலங்களை தேதி குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும்: நுகா்வோா் அமைப்புகள் வலியுறுத்தல்

மக்களவை ஜனநாயகம் குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி உள்ளது: வானதி சீனிவாசன் கேள்வி

குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT