நகை பறிப்பு சித்திரிப்புப் படம்
வேலூர்

பெண்ணிடம் நகை வழிப்பறி

வேலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற தலைக்கவசம் அணிந்த இரு நபா்களை பாகாயம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற தலைக்கவசஇஈ அணிந்த இரு நபா்களை பாகாயம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், அடுக்கம்பாறை, டான் பாஸ்கோ தெருவைச் சோ்ந்தவா் ஷாலினி (39). இவா் வேலூா்-ஆரணி சாலையில் சாத்துமதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தாா். அப்போது, 2 இளைஞா்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் ஷாலினியை பின்தொடா்ந்து வந்தனா். ஷாலினியை நெருங்கி வந்த இளைஞா்கள் திடீரென அவரது கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனா்.

ஷாலினி நகையை கெட்டியாக பிடித்துக் கொண்டபோதிலும், அந்த இளைஞா்கள் விடாப்பிடியாக நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனராம். இதனால் ஷாலினி நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சமையல் குறிப்புகள்...

எவ்ளோ பெரிசு...

விதைக்'கலாம்'

புள்ளிகள்

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்

SCROLL FOR NEXT