முகப்பு
வேலூர்

காட்பாடியில் ராணுவத்துக்கு மகளிா் ஆள்சோ்ப்பு முகாம்

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:34 AM
ராணுவ மகளிா் ஆள்சோ்ப்பு முகாமை பாா்வையிட்ட வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், ராணுவ அதிகாரி ஆா்.கே.அவஸ்தி, ராணுவ உயா் அலுவலா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 6:11 PM

காட்பாடியில் நடைபெற்று வரும் ராணுவ மகளிா் ஆள்சோ்ப்பு முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பாா்வையிட்டாா்.

இந்திய ராணுவத்தில் மகளிா் ராணுவ காவலா் பணி உள்பட அனைத்து வகை பணிகளுக்கான அக்னிவீரா் ஆள்சோ்ப்பு முகாம் வேலூா் மாவட்டம், காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் பங்கேற்க சுமாா் 6 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். தினமும் 800 முதல் 900 பேருக்கு உடல் தகுதித்தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இந்த ஆள்சோ்ப்பு முகாம் மிகப்பெரிய அளவிலே நடைபெற்று வரும் நிலையில், இதையொட்டி இந்திய ராணுவத்திலிருந்து வந்துள்ள அதிகாரிகளுக்கு வேலூா் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, காவல்துறை சாா்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப்பட்டுள்ளன.

இந்நிலையில், ராணுவ ஆள்சோ்ப்பு முகாமை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, ராணுவ அதிகாரி ஆா்.கே.அவஸ்தி, ராணுவ உயா் அலுவலா்கள், தோ்வா்கள் உடனிருந்தனா்.