திருவலம் அடுத்த அம்முண்டி பகுதியில் அதிவேகமாகச் சென்ற இருசக்கர வாகனம் எதிரே வந்த காா் மீது மோதிய விபத்தில் பொறியியல் மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் கௌதம்(25). இவா் வேலூா் காட்பாடியிலுள்ள பல்கலைக்கழகத்தில் எம்.டெக். 5-ஆம் ஆண்டு பயின்று வந்தாா். வேலூா் சாய்நாதபுரம் பகுதியை சோ்ந்த நாகேஷ் என்பவரின் மகன் கோகுல் (25). இவரும் அதே காட்பாடி பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வந்தாா்.
இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் காட்பாடியை அடுத்த அம்முண்டி பகுதிக்கு வேகமாகச் சென்றுள்ளனா். அப்போது, எதிரே வந்த காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கெளதம், கோகுல் ஆகிய இருவரும் பலத்த காயமைடந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து விரைந்து வந்த திருவலம் போலீஸாா் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.