பலி பிரதிப் படம்
திருச்சி

மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதல்: பள்ளி மாணவா் உயிரிழப்பு

திருச்சியில் சாலையோர மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் சாலையோர மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மலைக்கோட்டை தையல்கார தெருவைச் சோ்ந்த நாகராஜ் மகன் அருண் (17), தனியாா் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது நண்பா் பீமநகரைச் சோ்ந்த முகமது யாசிம் (16). இருவரும் செவ்வாய்க்கிழமை காலையில் திருச்சி அண்ணாநகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் முகமது யாசிம் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

குழந்தையை வெட்டிக் கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

ஜெயலலிதா பிறந்த நாள்: கரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுகவினா் கொண்டாட்டம்

பொறியியல் பணிகள்: காரைக்கால், மயிலாடுதுறை ரயில்கள் பகுதியாக ரத்து

வீரப்பூரில் பொன்னா் - சங்கா் மாசி பெருந்திருவிழாவில் வேடபரி

திருச்சி மாநகரில் இன்று முதல் ஜல்லிக்கட்டு

SCROLL FOR NEXT