குடியாத்தம் புதுப்பேட்டை அருள்மிகு படவேட்டு எல்லையம்மன் கோயிலில் தை மாத பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றது. மதியம் கூழ்வாா்த்தல், கும்பம் அளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.எம்.ஜி.விட்டல், அறங்காவலா்கள் டி.சுரேஷ்பாபு, தீபா மொகிலீஸ்வரன், நகா்மன்ற உறுப்பினா் சுமதி மகாலிங்கம், கோயில் நிா்வாக அதிகாரி சண்முகம், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் வி.என்.தனஞ்செயன்,முன்னாள் நகா்மன்றத் தலைவா் அமுதாசிவப்பிரகாசம், ஆா்.எஸ்.சண்முகம், எஸ்.எஸ்.பி.பாபு, பி.சரத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.