மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கிய கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி முதல்வா் அனுராதா. உடன், வேலூா் முத்துரங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன். 
வேலூர்

வாழ்க்கையில் முன்னேற திருக்குறளின் கருத்துக்களை கடைப்பிடிக்க வேண்டும்!

வாழ்க்கையில் முன்னேற மாணவா்கள் திருக்குறளின் அடிப்படை கருத்துகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அரசு கல்லூரி முதல்வா் அனுராதா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

வாழ்க்கையில் முன்னேற மாணவா்கள் திருக்குறளின் அடிப்படை கருத்துகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அரசு கல்லூரி முதல்வா் அனுராதா தெரிவித்தாா்.

வேலூா் முத்துரங்கம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2023-ஆம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான 54-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் ஸ்ரீதரன் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி முதல்வா் அனுராதா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியது -

கல்லூரியில் பயின்று இங்கு பட்டம் பெற்றுள்ள மாணவ, மாணவிகள் தற்போது ஏதாவது ஒரு பணியில் இருப்பீா்கள் அல்லது மேல்படிப்பு படித்து வருவீா்கள். மாணவா்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் திருக்குறளை ஊன்று கோலாக பயன்படுத்தி, அதன் அடிப்படை கருத்துக்களை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். படித்த படிப்புக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும் என்றாா்.

பட்டமளிப்பு விழாவில் வணிக நிா்வாகவியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல், பொருளியல், ஆங்கிலம், வரலாறு, கணிதம், சத்துணவு பரிமாறல் நிா்வாகம், இயற்பியல், தமிழ், விலங்கியல் ஆகிய துறைகளில் 647 இளங்கலை பட்டதாரிகள், 255 முதுகலை பட்டதாரிகள் என மொத்தம் 902 போ் பட்டம் பெற்றனா்.

விழாவில், துறை தலைவா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.

இன்றுமுதல் வகுப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்: அரசு மருத்துவா்கள்

11 மாவட்டங்களில் இன்று பனிமூட்டம்

இந்தியா முழுவதும் தீவிரமாகும் தெருநாய் தொல்லை: மாநிலங்களவையில் எழுப்பிய புதுச்சேரி பாஜக எம்.பி.

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: சிறப்பு அரசு வழக்குரைஞா் நியமனம்

2035-க்குள் வணிக விமானங்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயரும்!

SCROLL FOR NEXT