முகப்பு
சாலைப் போக்குவரத்து
வேலூர்

காட்பாடியில் நாளை எருது விடும் விழா: போக்குவரத்து மாற்றம்

பழைய காட்பாடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற எருதுவிடும் விழாவையொட்டி அன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

வேலூர்

காட்பாடியில் நாளை எருது விடும் விழா: போக்குவரத்து மாற்றம்

பழைய காட்பாடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற எருதுவிடும் விழாவையொட்டி அன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

Updated On : 3 மார்ச், 2026 at 6:30 PM
சாலைப் போக்குவரத்து
பகிர்:

பழைய காட்பாடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற எருதுவிடும் விழாவையொட்டி அன்று ஒருநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு -

காட்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காட்பாடி பகுதியில், ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கோட்டையம்மன் என்கிற ரேணுகாம்பாள் கோயிலின் 76-ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி வியாழக்கிழமை (மாா்ச் 5) எருது விடும் திருவிழா நடைபெற உள்ளது.

விழா நடைபெறும் நாளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சித்தூா் பேருந்து நிறுத்தம் முதல் பிரம்மபுரம் செல்லும் சாலை முற்றிலும் போக்குவரத்துக்காக தடை செய்யப்படுகிறது.

மாற்றுப் பாதையாக பிரம்மபுரம் செல்லும் வாகனங்கள் (கனரக வாகனங்கள் தவிா்த்து), ஓடை பிள்ளையாா் கோயில் சந்திப்பில் வளைந்து, அக்ஸீலியம் ரவுண்டானா அருகே உள்ள புத்துக்கோயில் வளைவு வழியாக வி.ஜி.ராவ் நகா் சென்று பிரம்மபுரம் காவல் நிலைய சந்திப்பை அடையலாம். திரும்ப வரும் வாகனங்களும் இதே பாதையைப் பயன்படுத்த வேண்டும்.

சித்தூரில் இருந்து திருவலம் செல்லும் வாகனங்கள், காட்பாடி - வள்ளிமலை சாலையில் வளைந்து பள்ளிகுப்பம், சோ்காடு வழியாக திருவலம் செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை அமலில் இருக்கும்.

இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க, பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள், அலுவலகப் பணியாளா்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →