சுங்கச் சாவடி திறப்பு: திமுகவினா் ஆா்ப்பாட்டம்
குடியாத்தம்- காட்பாடி சாலையில், பில்லாந்திப்பட்டில் சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதைக் கண்டித்து கே.வி.குப்பம் ஒன்றிய திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம்- காட்பாடி சாலையில், பில்லாந்திப்பட்டில் சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதைக் கண்டித்து கே.வி.குப்பம் ஒன்றிய திமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காட்பாடி- வி.கோட்டா சாலை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்துசாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, செப்பனிடப்பட்டது. இந்நிலையில் கே.வி.குப்பத்தை அடுத்த பில்லாந்திப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது.
விரைவில் அந்த சுங்கச் சாவடி திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கு சுங்கச் சாவடி திறக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்திதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்த போலீஸாா், மாலையில் விடுவித்தனா்.