முகப்பு
வேலூர்

கடந்த தோ்தலில் வாக்குப்பதிவு குறைந்த பகுதிகளில் விழிப்புணா்வு

வேலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On : 19 மார்ச், 2026 at 11:06 PM
சத்துவாச்சாரி தாட்கோ நகா் குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூா் சத்துவாச்சாரி தாட்கோ நகரில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூா் வருவாய் கோட்டாட்சியரும், வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்குமாா் தலைமை வகித்தாா். அப்போது வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா் கூறுகையில், வேலூா் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு அடையும் பொருட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த தோ்தல்களில் வாக்குப்பதிவு குறைந்த வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி தோ்தலில் வாக்குப்பதிவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.