கோயம்புத்தூர்

தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் நீலகிரி ஆட்சியர்!

உதகை, அக். 8: 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் சங்கத்தின் அலுவலர் அல்லாத தலைவர் பொறுப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இந்த ச

ஏ. பேட்ரிக்

உதகை, அக். 8: 132 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் சங்கத்தின் அலுவலர் அல்லாத தலைவர் பொறுப்பிலிருந்து மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். இந்த சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஆட்சியர் ஒருவர் ராஜிநாமா செய்துள்ளது இதுவே முதன்முறையாகும்.

 உதகையில் நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் சங்கம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் அலுவலர் அல்லாத தலைவராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். துணைத் தலைவர், கௌரவச் செயலர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 10 பேர் தேர்வு செய்யப்படுவர். இப்பதவிகளுக்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.

 இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் யானைகளின் வழித்தடங்களைக் கண்டறிவது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஆய்வு நடத்தப்பட்டு, பொதுமக்களின் கருத்துக் கேட்கப்பட்டது. இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் யானை வழித்தடம் தொடர்பாக வனத்துறையினர் தேர்வு செய்துள்ள இடங்களை அப்படியே ஏற்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.

 இந்தப் பிரச்னை தொடர்பாக பொதுமக்களிடமும், மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதி மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டபோது, நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் சங்கம் தங்களையும் இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளுமாறு விண்ணப்பித்திருந்தது.  வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இவ்வாறு அச் சங்கம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, தில்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இயற்கை ஆர்வலர்கள் சிலர் இவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.

 ஆனால், மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட ஒரு சங்கம், இவ்வாறு வழக்கில் இணைத்துக் கொண்டுள்ளது தவறானது என வருவாய்த் துறையினர் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

 நீலகிரி சுற்றுச்சூழல் மற்றும் கானுயிர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள சிலருக்கு மசினகுடி மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் நிலங்களும், ரிசார்ட்டுகளும் உள்ளன. அவர்கள் தங்களது நிலத்தைப் பாதுகாக்க நினைப்பதால் இப்பகுதியில் யானைகளின் வழித்தடம் குறித்து முடிவெடுக்க வேண்டாமென தங்கள் சங்கத்தின் தலைவரான ஆட்சியரைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

  இரு தரப்பிலிருந்தும் தேவையற்ற பிரச்னைகள் எழுந்த நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்த கால கட்டத்தில் அலுவலர் அல்லாத தலைவர் பொறுப்பு வகித்து வந்த ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், அப்பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை எனக்கூறி ராஜிநாமா கடிதம் கொடுத்துள்ளார். இந்த ராஜிநாமா இன்னமும் ஏற்கப்படவில்லை.

 மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இச்சங்கம் இயங்க வேண்டுமென விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ள சூழலில் அதற்கு மாறாக புதிய தலைவரை தெரிவு செய்ய இயலாத நிலை உள்ளது.

 சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் இயங்கி வரும் சங்கத்திலேயே இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது, யானை வழித்தடம் தொடர்பாகப் போராடி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT