கோயம்புத்தூர்

"சாதி, மத வெறிக்குச் சாட்டையடி கொடுத்தவர் பாரதி'

கோவை, அக். 13: சாதி, மத வெறிக்குச் சாட்டையடி கொடுத்தவர் பாரதி என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் கூறினார்.   கோவை- சூலூர் ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை சார்பில் முத்தமிழ் விழா செ

தினமணி

கோவை, அக். 13: சாதி, மத வெறிக்குச் சாட்டையடி கொடுத்தவர் பாரதி என்று மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் கூறினார்.

  கோவை- சூலூர் ஆர்.வி.எஸ். கல்வி அறக்கட்டளை சார்பில் முத்தமிழ் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அறங்காவலர் கே.பத்மாவதி குப்புசாமி விளக்கேற்றினார். செயலர் ஹெச்.நியூமென் வரவேற்றார். மேலாண் அறங்காவலர் கே.செந்தில்கணேஷ் தலைமை வகித்தார். புலவர் சூ.ம.வெள்ளியங்கிரி அறிமுக உரையாற்றினார்.

  இதில் "பாரதி பரம்பரை' என்ற தலைப்பில் த.ஸ்டாலின் குணசேகரன் பேசியது: நாடு இப்போதுள்ள சூழலில் இயல்பான நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் இளைஞர்கள்தான் ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

  தற்போதைய சூழலில் பாரதியின் கருத்துகளை இளைஞர்கள் தங்களது நெஞ்சில் கல்வெட்டாய் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். "சாதிச் சண்டைகள் போச்சே, உங்கள் சமயச் சண்டை போச்சே, நீதி சொல்ல வந்தாய் கண்முன் நிற்கொணாது போடா' என்ற பாரதியின் வரிகள், சாதி, மத வெறிக்குச் சாட்டையடி கொடுப்பவையாக உள்ளன. அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ அன்றாடம் அறைகூவி அழைத்தவன் பாரதி.

÷பாரதி ஒரு மாபெரும் கவிஞர் என்பதை அனைவரும் நன்கு அறிவர். இதழியல் துறையில் முத்திரை பதித்தவர் பாரதி. சுதேசமித்திரன், இந்தியா இதழ்கள் மட்டுமல்லாது, ஐந்து இதழ்களில் ஒரே சமயத்தில் ஆசிரியராக விளங்கி, இதழியல் துறைக்கு மாபெரும் பங்களிப்பைச் செலுத்தியவர். ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்தது அவரது தனிச்சிறப்பு.

  கதைகள் மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் கவிதைகளும் எழுதியுள்ளார். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர், விடுதலைப் போராட்டத்தில் வீறுகொண்டு களமிறங்கிய வீரர், பெண்ணுரிமைப் போராளி என்ற பன்முக ஆளுமை பெற்று விளங்கிய பாரதி, 39 வயதிலேயே மறைந்து விட்டார். இத்தனை சிறப்புகளையும் அந்த இளம் வயதிலேயே எய்திய பாரதியின் ஆர்வமும், ஈடுபாடும், முயற்சியும் இக் காலத்தில் உள்ள மாணவர்களுக்கு உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கின்ற அம்சங்களாகும்.   விவேகானந்தரும் இதேபோன்று 39 வயதில் மறைந்தவர்தான். அவர்தான் இளைஞர்களுக்கு எழுச்சி நாயகனாக விளங்கி, இன்று நாடெங்கும் போற்றப்படுகிறார். மதங்களின் எல்லைகளைத் தாண்டி, மனித நேயத்தை வலியுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.

÷ஒருகாலத்தில், படித்தவர்களின் குழந்தைகளும், நிலச்சுவான்தாரர்களின் பிள்ளைகளும், பெரும் தொழிலதிபர்களின் வாரிசுகளும் மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பு இருந்தது. இப்போது அச்சூழல் மாறியுள்ளது. மாணவர்களுக்குச் சமமாக மாணவியரும் கல்வி கற்பது மகிழ்ச்சியளிக்கிறது.

  அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கிற, சாதி, மத இணக்கத்துடன் கூடிய, பாரதி கண்ட பாரதத்தைப் படைக்க, பாரதி பரம்பரையைச் சேர்ந்த நாம் அனைவரும் சபதமேற்க வேண்டும் என்றார் ஸ்டாலின் குணசேகரன்.

  கல்வியில் சிறந்த மாணவ மாணவியருக்கு அறக்கட்டளை அறங்காவலர் ஸ்ரீ வித்யாலட்சுமி செந்தில்கணேஷ் பரிசு வழங்கினார். புலவர் பொன்முடி.சுப்பையன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவிக்கும் ரசவாதி!

சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!

மதுரை அழகர்கோயில் தேரோட்டம்!

தில்லியை திணறடிக்கும் மழை; இன்றும் ரெட் அலர்ட்

டிரம்ப் - புதின் சந்திப்பு! உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

SCROLL FOR NEXT