கோயம்புத்தூர்

டயர்களுக்கு தட்டுப்பாடு இயங்காத அரசுப் பேருந்துகள்!

கோவை, செப். 27: டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோவை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் 50-க்கும் அதிகமான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,போக்குவரத்துக் கழகத்துக்கு நாள்தோறும் 

சி.ஜெ. ரவி கிருஷ்ணன்

கோவை, செப். 27: டயர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோவை அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் 50-க்கும் அதிகமான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்,போக்குவரத்துக் கழகத்துக்கு நாள்தோறும்  லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

÷கோவை சுங்கம், ஒண்டிப்புதூர், உக்கடம், மருதமலை, அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 9 பணிமனைகள் உள்ளன. இப் பணிமனைகளில் 1600 நகர மற்றும் புறநகர் பேருந்துகள் பராமரிக்கப்பட்டு  வருகின்றன.

÷பேருந்துகளுக்கு பொருத்தப்படும் உதிரிப் பாகங்களின் விநியோகம் சீராக இல்லை என போக்குவரத்து ஊழியர்கள் குறை கூறுகின்றனர். இதனால் ஒரு பேருந்தில் உள்ள நல்ல உதிரிப் பாகங்களை கழற்றி மற்றொரு பேருந்துக்கு பொருத்த வேண்டிய கட்டாயம் நிலவுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் பேருந்துகளை பராமரிக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் பணிப் பளு ஏற்படுகிறதாம்.

÷பேருந்துக்கு முக்கிய உதிரிப் பாகமாக டயர்கள் கருதப்படுகின்றன. ஒரு பேருந்துக்கு குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு ஒருமுறை புதிய டயர்கள் பொருத்த வேண்டிய நிலை ஏற்படும். தேய்ந்துப் போன டயரைக் கொண்டு பேருந்துகளை இயக்கினால் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், தேய்ந்த டயர்களால் மைலேஜ் வெகுவாகக் குறைந்துவிடும்.

÷ அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நிர்ணயித்த மைலேஜை பேருந்து கொடுக்கவில்லையெனில், அதற்கு அந்தப் பேருந்து ஓட்டுநர்தான் பொறுப்பு ஆவார். அவரது பதில் சரியானதாக இல்லை என்றால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.

÷அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்துக்கு கடந்த சில மாதங்களாகவே சரிவர பேருந்து டயர்கள் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் தேய்ந்துபோன டயர்களை மாற்ற முடியாமல் பராமரிப்பு ஊழியர்கள் திணறி வருகின்றனர். பொருத்துவதற்கு டயர்கள் இல்லாததால் கோவை சுங்கம் பணிமனையில் மட்டும் 9 பேருந்துகள் கேட்க ஆளின்றி நிறுத்தப்பட்டுள்ளன.

 பல மாதங்களாகவே இந்தப் பேருந்துகள் பயன்படுத்தாமல் இருப்பதால், அவை பாழாகும் நிலை உருவாகியுள்ளது. கோவை பணிமனைகளுக்கு டயர்கள் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒண்டிப்புதூர், உக்கடம், மருதமலை, அவிநாசி சாலை மேம்பாலம் கீழ் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, மருதமலை ஆகிய பகுதிகளில் உள்ள பணிமனைகளில் 50-க்கும் மேற்பட்ட பேருந்துகள் டயர்கள் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய வழித்தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

÷நாள் ஒன்றுக்கு அரசுப் பேருந்தில் குறைந்தபட்சம் | 10 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். இந் நிலையில் போக்குவரத்து கழகத்தின் மெத்தனப் போக்கு காரணமாக அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.  

÷ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழகம், மேலும் கடும் நஷ்டத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள்.

÷இதுகுறித்து கோவை கோட்ட பொதுமேலாளர் தேவராஜனிடம் கேட்டபோது, "டயர்களின் விநியோகம் சீராக உள்ளது. அனைத்து வழித்தடங்களிலும்

தடையில்லாமல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

SCROLL FOR NEXT