"தனிமனித மாற்றமே சமுதாய மாற்றம்'
வெள்ளக்கோவில்,ஜன.8: அனைத்து நிலைகளிலும் சமுதாயத்தை மேம்படுத்த தனி மனித மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் இயக்கம் செயல்பட்டு வருவதாக இயக்கம் சார்பில் தெரிவிக்கப
வெள்ளக்கோவில்,ஜன.8: அனைத்து நிலைகளிலும் சமுதாயத்தை மேம்படுத்த தனி மனித மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் இயக்கம் செயல்பட்டு வருவதாக இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வெள்ளக்கோவிலில் இயக்கம் சார்பில் தொடங்கிய 12 ஜோதிர்லிங்க தரிசனம் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் (ஜன.10) திங்கள்கிழமை வரை நடைபெறுகிறது.
நம் நாட்டில் சிவலிங்க வழிபாட்டில் புகழ் பெற்ற 12 திருத்தலங்களின் கோயில் மாதிரிகள் அரங்கில் வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளன.
மனிதன் அவதரிப்பு, உலக நடப்பில் நல்லது-கெட்டது, தெய்வீக சக்தி போன்றவை குறித்து பட விளக்கம் தரப்படுகிறது.
இந்த இயக்கம் 1936-ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஏறத்தாழ 140 நாடுகளில் 9000-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
ஒளி வடிவமாக உள்ள இறைவன், எங்களது குரு பிரஜா பிதா பிரம்மா உடலில் பிரவேசம் செய்து, திவ்ய அவதாரம் எடுத்துள்ளதாக நம்புகிறோம்.
ஒருங்கிணைந்த இந்தியாவில் கராச்சியில் அவதரித்த இவர் தற்போது நம்மிடையே இல்லை. பக்தி, தியான மார்க்கம் மூலம் மனித வளத்தை மேம்படுத்த அவர் அருளிய போதனைகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என இயக்கத்தின் ஆன்மிக சகோதரி ராஜேஸ்வரி தெரிவித்தார்.