முகப்பு
கோயம்புத்தூர்

சின்ன கல்லார் அருவி: ஜன.15 முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வால்பாறை, ஜன. 8: வால்பாறை அடுத்துள்ள சின்ன கல்லார் அருவிக்கு செல்ல ஜன.15-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    வால்பாறையில் இருந்து 15 கி.மீ.

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

வால்பாறை, ஜன. 8: வால்பாறை அடுத்துள்ள சின்ன கல்லார் அருவிக்கு செல்ல ஜன.15-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக வனத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது சின்ன கல்லார் அருவி. மழைக் காலங்களில் அதிகளவில் மழை பெய்யும் இடம் சின்ன கல்லார் பகுதி ஆகும். இப்பகுதியில் இருக்கும் அருவிக்கு செல்ல ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு தூரி பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.

  இதனை காண வால்பாறைக்கு வரும் சுற்றுலாவினர் அனைவரும் இங்கு செல்வர். ஆனால் இந்த தூரி பாலம் பழுதடைந்து காணப்பட்டதால் வனத் துறையினர் கடந்த ஒரு வருடமாக சின்ன கல்லார் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.

   தற்போது இந்த பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மானாம்பள்ள வனச் சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் தலைமையில் வன்த் துறையினர் இப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் (படம்).

    தற்போது தூரிபாலம் நல்ல நிலையில் இருப்பதால் அப்பகுதியில் உள்ள அருவிக்கு செல்ல ஜன. 15-ம் தேதி முதல் சுற்றுலாவினர் அனுமதிக்கப்படுவர் என்று வனச் சரகர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறினார்.   

முழு கட்டுரையைப் படிக்க →