சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம்: ஏயுடி கோரிக்கை
கோவை, ஜன. 8: சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) வலியுறுத்தியுள்ளது. கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 64-வத
கோயம்புத்தூர்சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம்: ஏயுடி கோரிக்கை
கோவை, ஜன. 8: சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) வலியுறுத்தியுள்ளது. கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 64-வத
கோவை, ஜன. 8: சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) வலியுறுத்தியுள்ளது.
கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 64-வது மாநில மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் புதிய பாடவகுப்புகளைத் தொடங்குவதற்கான தடையை விலக்க வேண்டும். அதேநேரம் இக் கல்லூரிகளில் அதிகரித்துவிட்ட சுயநிதிப் பிரிவு வகுப்பைகளை நெறிப்படுத்தி, தேவையானவற்றை அரசு உதவிபெறும் பாடப் பிரிவுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயநிதிக் கல்லூரிகளை முழுமையாக நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம் கொண்டுவர, மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
தேசிய அளவில் உயர்கல்விக்கான அமைப்புகளை ஜனநாயகப்படுத்தாததே அவற்றின் செயல்பாடு குறைந்துபோகக் காரணமாக இருக்கிறது. ஆகவே, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தேசிய அளவில் குழு அமைப்பது தேவையற்றது. இதற்கான சட்ட முன்வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
வணிக நோக்கம் கொண்ட பன்னாட்டு பல்கலை.களை இந்தியாவில் அவசரமாக அனுமதிப்பது பல்வேறு பாதிப்பைகளை ஏற்படுத்தும். இம்முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு உயர்கல்வி பொறுப்பில் இருந்து மத்திய அரசு விலகக் கூடாது.
ஒவ்வோர் ஆண்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் 6 சதவீதத்தை உயர்கல்விக்காக ஒதுக்குவது அவசியம்.
ஓய்வூதியம் பெற இயலாத கல்லூரி ஆசிரியர் பணி என்பது ஆசிரியப் பணியின் கண்ணியத்தையும், பற்றையும் குறைத்துவிடும். ஆகவே, மாநில அரசுகள் 2004 முதல் ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தின் அனைத்துப் பல்கலை.களிலும் தமிழ்ச் செம்மொழி உயராய்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
உதவிபெறும் கல்லூரிகளில் தமிழ்வழிப் பாட வகுப்புகளைத் தொடங்க மானியஉதவி அளிக்க வேண்டும்.
கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு போதிய எண்ணிக்கையில் பணியாளர்களை நியமனம் செய்வது, மாணவர் சேர்க்கை விதிகளை மீறும் உதவிபெறும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கையை ஒற்றைச்சாளர முறையில் நடைமுறைப்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.