விசைத்தறித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பவானி, ஜன. 8: பொங்கல் பண்டிகைக்கு 15 சத போனஸ் வழங்கக் கோரி அந்தியூரில் விசைத்தறித் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்தியூர் தவுட்டுப்பாளையம் சந்தை திடலில், சிஐடியு விசைத்தறித் தொ
பவானி, ஜன. 8: பொங்கல் பண்டிகைக்கு 15 சத போனஸ் வழங்கக் கோரி அந்தியூரில் விசைத்தறித் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்தியூர் தவுட்டுப்பாளையம் சந்தை திடலில், சிஐடியு விசைத்தறித் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கப் பொறுப்பாளர் குமார் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்டச் செயலர் சுப்பிரமணியன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
சங்க நிர்வாகிகள் பழனிசாமி, வினோத், குமாரசாமி உள்பட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.