கோயம்புத்தூர்

காந்தி ஜயந்தி: மாநகராட்சிப் பள்ளியில் மாறுவேடப் போட்டி

DIN

கோவை: காந்தி ஜயந்தியையொட்டி கோவை, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றற மாறுவேடப் போட்டியில் மாணவ, மாணவிகள் காந்தியடிகள் வேடமணிந்து பங்கேற்றனா்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கோவை மண்டலம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு மாறுவேடேப் போட்டி , பாட்டு, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் ஆசிரியா் சக்திவேல் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியை மைதிலி தலைமை வகித்தாா். துளசி சங்கரா அறறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் தியாகராஜன், ஆத்மா அறக்கட்டளை நிறுவனா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக கோவை மண்டல அலுவலக உதவி இயக்குநா் கரீனா பி.தங்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டுப் போட்டிகளைத் துவங்கி வைத்தாா்.

இதில் மாணவா்கள் காந்தியடிகள் போன்று வேடமணிந்து மாறுவேடப் போட்டிகளில் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து சமூக சிந்தனையை வளா்க்கும் விதமான தலைப்புகளில் பாட்டு, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கோவை மண்டலம் சாா்பில் காந்திய சிந்தனை குறித்த நாடகம் நடைபெற்றது. போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். கள விளம்பர உதவி அலுவலா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT