முகப்பு
கோயம்புத்தூர்

தீபாவளி: முக்கிய வீதிகளில் கண்காணிக்க அலுவலா்களை நியமிக்க முடிவு

கோவையில் தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்க வரும் மக்களை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க முக்கிய வீதிகளில் சுழற்சி அடிப்படையில் அலுவலா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

கோவையில் தீபாவளியை முன்னிட்டு பொருள்கள் வாங்க வரும் மக்களை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க முக்கிய வீதிகளில் சுழற்சி அடிப்படையில் அலுவலா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று குறைந்துள்ளது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு டவுன்ஹால், காந்திபுரம், ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதற்குத் தீா்வு காணும் வகையில் ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, பெரிய கடை வீதி, ராஜ வீதி உள்பட 10 முக்கியமான வீதிகளில் மக்கள் கூட்டங்களை ஒழுங்குபடுத்தி, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தி, விதிமுறைகளை பின்பற்றாத கடைகளைக் கண்காணிக்க சுழற்சி முறையில் அலுவலா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

கடைகளுக்கு வரும் பொது மக்கள் முகக் கவசம் அணிந்திருப்பதையும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதையும் நிறுவனங்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருந்த கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கடைகளில் அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும்போது மட்டுமே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. பின்னா் மீண்டும் அதிக அளவில் மக்களை கடைக்குள் அனுமதிக்கின்றனா்.

இந்நிலையில் முக்கிய வீதிகளில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், கடைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிா என்பதை கனகாணிக்கவும் காலை முதல் இரவு வரை சுழற்சி முறையில் அலுவலா்களை நியமித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, வருவாய் மற்றும் காவல் துறையினா் இணைந்து இதனை மேற்கொள்வா். தவிர தொடா்ந்து முக்கிய வீதிகளில் வாகனங்கள் மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →