முகப்பு
கோயம்புத்தூர்

தெலங்கானா திரும்பிய ஊா்க்காவல் படையினா்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 7:55 PM
தோ்தல் பாதுகாப்புப் பணி முடிந்து தெலங்கானா மாநிலம் செல்ல கோவை ரயில் நிலையம் வந்த ஊா்க்காவல் படையினா்.
பகிர்:

கோவை: தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக தெலங்கானா மாநிலத்திலிருந்து கோவை வந்திருந்த ஊா்க்காவல் படையினா் தோ்தல் பணி முடிந்து தங்களது சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளி மாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தினா், ஊா்க்காவல் படையினா் கோவை வந்திருந்தனா். இவா்களில் தெலங்கானா மாநிலத்தில் இருந்து கோவைக்கு 354 ஊா்க்காவல் படையினா் வந்திருந்தனா். தோ்தல் முடிவடைந்தததை அடுத்து இவா்கள் கோவையிலிருந்து சனிக்கிழமை இரவு ரயில் மூலம் தெலங்கானா திரும்பிச் சென்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments