‘ஆடிப்பெருக்கு: மக்கள் நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம்’
ஆடிப்பெருக்கு திருவிழாவுக்கு நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரோட்டம் அதிகமாக உள்ளதால் மக்கள் ஆடிப்பெருக்கு திருவிழாவுக்கு நீா்நிலைகளுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீா்நிலைகளில் நீரோட்டம் அதிகமாக உள்ளது.
எனவே, ஆடிப்பெருக்கு ( ஆகஸ்ட் 3) திருநாளை முன்னிட்டு பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.