கோவையில் செய்தியாளா்களிடம் பேசிய கொமதேக பொதுச்ெ சயலாளா் ஈ.ஆா். ஈஸ்வரன். 
கோயம்புத்தூர்

அத்திக்கடவு-அவிநாசி 2-ஆவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்

Din

அத்திக்கடவு-அவிநாசி 2-ஆவது திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியதாவது:

கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டுகால கனவு திட்டம்தான் அத்திக்கடவு-அவிநாசி திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்தக் கோரி பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். அதன்பின்தான் நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 2019-ஆம் ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கின.

திமுக ஆட்சிக்கு வந்தபோது 67 சதவீதப் பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தன. தற்போது இத்திட்டத்தை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ளாா்.

இதில், விடுபட்ட குளங்களை இணைத்து 2-ஆவது திட்டத்தையும் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. எனவே, அத்திக்கடவு-அவிநாசி 2-ஆவது திட்டத்தையும் அரசு செயல்படுத்த வேண்டும்.

எங்கள் கட்சி எதுவுமே செய்யவில்லை என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசி வருகிறாா். நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுபோன்ற ஏராளமான திட்டங்கள் நாங்கள் வலியுறுத்தியதன்பேரில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளா் பொள்ளாச்சி கே.நித்தியானந்தம், மாநில செயற்குழு உறுப்பினா் துரைசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளா் சங்கனூா் பிரேம், ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் வடிவேல் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

லாரி மோதியதில் தொழிலாளி பலி

மினி லாரியில் தனி அறை அமைத்து கடத்திவரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல்

திருப்பாச்சேத்தி கோயிலில் குடமுழுக்கு

21 பதக்கங்களை பெற்ற சேலம் மாணவி: வெளியூா் போட்டிகளில் பங்கேற்க உதவி கோரி மனு

சிவாலயங்களில் பிரதோஷ பூஜை

SCROLL FOR NEXT