கோவையில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம்
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற விவாதிப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளா், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சிறப்புப் பிரிவு காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கடந்த செப்டம்பா் மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடா்புடையவா்களைத் திறம்பட செயல்பட்டு கைது செய்த மற்றும் அவா்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை பெற்றுத் தர சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவா்களை ஊக்குவிக்கும் வகையில் 13 காவல் ஆய்வாளா்கள், 29 உதவி ஆய்வாளா்கள், 6 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 7 தலைமைக் காவலா்கள், 9 முதல் நிலைக் காவலா்கள், 36 காவலா்கள் என மொத்தம் 100 பேரை பாராட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவா்கள் மீதும், சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீதும் காவல் துறையினா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.