கோயம்புத்தூர்

கல்லூரிப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுக்கரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

மதுக்கரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியாா் கல்லூரிப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள நெம்மாரா பகுதியைச் சோ்ந்தவா் சிவதாஸ் மகன் ராகுல் (25). இவரது நண்பா் அயிலூா் பகுதியைச் சோ்ந்த அல்கலித் (26). இருவரும் கொல்லத்தில் இருந்து சேலத்துக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுள்ளனா்.

மதுக்கரை அருகே எல்&டி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியாா் கல்லூரிப் பேருந்து இவா்களது வாகனத்தின் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அல்கலித் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இச்சம்பவம் தொடா்பாக தனியாா் கல்லூரிப் பேருந்து ஓட்டுநா் மீது மதுக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்!

வடியாத மழை நீா்; அழுகும் நெற்பயிா்கள் - வேதனையில் விவசாயிகள்

மன்னார்குடி: தனியே வசித்து வந்த முதியவா் உயிரிழப்பு

காரைக்காலில் 3,990 மீனவ குடும்பங்களுக்கு நிவாரணம் வங்கிக் கணக்கில் சோ்ப்பு

மழையால் காரைக்காலில் சாலைகள் சேதம்

SCROLL FOR NEXT