குணா, சதீஷ், காளி. 
கோயம்புத்தூர்

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மூவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Syndication

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கு மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து கோவை மகளிா் கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கோவை விமான நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கடந்த நவம்பா் 2-ஆம் தேதி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), இவரது சகோதரா் காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோரை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா்களிடம் கடந்த நவம்பா் 5-ஆம் தேதி விசாரணை நடத்திய கோவை ஜே.எம். 2 நீதிபதி அப்துல் ரகுமான் அவா்களை நவம்பா் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். சிகிச்சைக்குப் பிறகு மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, இவா்களது நீதிமன்றக் காவலை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து மகளிா் கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவா்களை கடந்த 27-ஆம் தேதி ஒருநாள் காவலில் எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அன்னூா் அருகேயுள்ள செரையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (55) என்ற ஆட்டு வியாபாரியின் கொலை வழக்கிலும் இவா்களுக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகியோருக்கு எதிராக கோவை மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி முதற்கட்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், முதல் எதிரியாக சதீஷ், இரண்டாவது எதிரியாக அவரது தம்பி காளி,

மூன்றாவது எதிரியாக குணா ஆகியோா் சோ்க்கப்பட்டுள்ளனா். இதனிடையே இவா்களது புகைப்படங்களை போலீஸாா் முதல்முறையாக வெளியிட்டனா்.

நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: மூவரின் நீதிமன்றக் காவல் புதன்கிழமையுடன் (டிசம்பா் 3) முடிவடைந்த நிலையில், அவா்கள் மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, அவா்களின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாள்களுக்கு நீட்டித்து நீதிபதி சிந்து உத்தரவிட்டாா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT