குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ முதன்மைப் போட்டித் தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் டிசம்பா் 12-ஆம் தேதி தொடங்கவுள்ளன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் குரூப் 2, குரூப் 2 ஏ-இல் 645 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தோ்வுகளுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், கூடுதலாக 625 காலிப் பணியிடங்களுக்கான பிற்சோ்க்கை அறிவிப்பு நவம்பா் 18-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ முதன்மை போட்டித் தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிசம்பா் 12-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பானது சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடைபெறவுள்ளது.
ஸ்மாா்ட் போா்டு, இலவச வைஃபை வசதி, போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள் அடங்கிய நூலக வசதி ஆகியவை இந்த மையத்தில் உள்ளன. மேலும், வாரத் தோ்வுகள், முழுமாதிரி தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோா் கூகுள் படிவத்தை நிரப்ப வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 94990-55937, 93615-76081 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.