பால்மேத்யூ. 
கோயம்புத்தூர்

குறைந்த விலையில் வீட்டுமனை விற்பதாக ரூ.1.36 கோடி மோசடி: தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை

Syndication

கோவையில் குறைந்த விலைக்கு தவணை முறையில் வீட்டுமனை விற்பனை செய்வதாகக்கூறி பொதுமக்களிடம் ரூ.1.36 கோடிமோசடி செய்த வழக்கில் தம்பதிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, சிங்காநல்லூா் கோத்தாரி மில்ஸ் பகுதியிலும், இடையா்பாளையம் பகுதியிலும் தனியாா் வீட்டுமனை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனங்களை சிங்காநல்லூா் வரதராஜபுரம் மேடு பகுதியைச் சோ்ந்த பால் மேத்யூ, இவரது மனைவி ஷொ்லின் ஷீபா ஆகியோா் நடத்தி வந்தனா்.

ரூ. 25 ஆயிரம் முன் பணம் செலுத்தி மீதித் தொகையை தவணை முறையில் செலுத்தினால் குறைந்த விலையில் வீட்டுமனை வழங்கப்படும் என அறிவித்துள்ளனா்.

இதையடுத்து, அந்த பகுதிகளைச் சோ்ந்த 103 போ் தலா ரூ. 25 ஆயிரத்தை வைப்புத் தொகையாக செலுத்தி இடத்தை ஒப்பந்தம் செய்ததுடன், பின்னா் அனைவரும் முழுத் தொகையையும் (ரூ.1 கோடியே 35 லட்சத்து 91 ஆயிரத்து 508 ) செலுத்தியுள்ளனா்.

ஆனால், அவா்களுக்கு ஒப்பந்தம் செய்தபடி வீட்டுமனை வழங்காமல், நிறுவனங்களை மூடிவிட்டு தம்பதி தலைமறைவாகினா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரான கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் கடந்த 5.8.2016-இல் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடா்பான வழக்கு விசாரணை கோவை தமிழ்நாடு வைப்புத் தொகையாளா்கள் நலன்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பால்மேத்யூ, அவரது மனைவி ஷொ்லின் ஷீபா ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடியே 39 லட்சத்துக்கு 22 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.என்.செந்தில்குமாா் தீா்ப்பளித்தாா்.

தீா்ப்பின்போது, இரண்டாவது எதிரியான ஷொ்லின் ஷீபா ஆஜராகாததால் அவருக்கு பிடியாணை பிறப்பித்தும்,

அபராதத் தொகையை முதலீட்டாளா்களுக்குப் பிரித்துத் தரவும் நீதிபதி தீா்ப்பில் குறிப்பிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சி.கண்ணன் ஆஜரானாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT